மின்சார கட்டண திருத்தம் தொடர்பிலான பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, வீடுகளுக்காக தற்போது காணப்படுகின்ற 1 முதல் 30 அலகுகளுக்கான நிலையான மின் கட்டணத்தை 30 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அலகுகளுக்காக மின்சார கட்டணத்தை 430 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பரிந்துரை முன்வைத்திருந்தது.
அத்துடன், 1 முதல் 30 அலகுகளுக்கு இடையில் தற்போது ஒரு அலகுக்கு காணப்படுகின்ற 2 ரூபா 50 சதம் என்ற என்ற கட்டணத்தை, 8 ரூபா வரை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த யோசனைக்கு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அதே பரிந்துரையை முன்வைத்துள்ளது.
31 முதல் 60 வரையான நிலையான மின்சார கட்டணத்தை 1100 வரை அதிகரிக்குமாறு மின்சாரச சபை யோசனை முன்வைத்துள்ள போதிலும், அந்த கட்டணத்தை 300 ரூபாவாக நிர்ணயிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 12 ரூபா 50 சதம் வரை அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ள போதிலும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 10 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.