Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலக தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

உலக தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

உலக பல்கலைக்கழகங்கள் 2023 தரவரிசையில் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 601 – 800 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் உருவாக்கப்பட்டன.

டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் உள்ளிட்ட குறியீட்டு அம்சங்களின் அடிப்படையில், 1799 உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றனர்.

இதன்படி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 5வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியன மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

Recent News