Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஈரானின் தலையை நசுக்கவும் தயார் - பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல்..!

ஈரானின் தலையை நசுக்கவும் தயார் – பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல்..!

ஈரானின் தலையை நசுக்கவும் இஸ்ரேல் தயார் எனவும், ஆனால் எப்போது என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என இஸ்ரேலின் பொருளாதார அமைச்சரான நிர் பர்கத் தெரிவித்துள்ளார்.


ஈரானின் அயதுல்லாக்கள் மொத்தமாக துடைத்து நீக்கப்படுவார்கள் எனவும் நிர் பர்கத் சுட்டிக்காட்டியுள்ளார். காசா பகுதியில் எப்போது வேண்டுமானாலும், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற சூழலில் அவரது ஆவேசமான கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் முழுவதும் லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.


இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லாவை மட்டுமல்ல ஈரானையே மொத்தமாக அழிக்கும் நிலை வரும் என நிர் பர்கத் கொந்தளித்துள்ளார். மேலும், ஹமாஸ் போன்றே லெபனானும் ஹிஸ்புல்லாவும் பெரும் விலை கொடுக்கப் போகிறார்கள்.


ஆனால் அது போதாது என அமைச்சர் நிர் பர்கத் குறிப்பிட்டுள்ளார்.
20,000 போராளிகளுடன், மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த துணை இராணுவப் படைகளில் ஒன்று ஹிஸ்புல்லா. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்புக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை ஈரான் வழங்குவதாக நம்பப்படுகிறது.

2006ல் ஹிஸ்புல்லா தொடர்பில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது ஈரான் உத்தரவிடாமல் ஹிஸ்புல்லா களமிறங்காது என குறிப்பிட்டுள்ள நிர் பர்கத், பல வகையில் ஹெஸ்புல்லா தான் ஈரான் என்றார்.

Recent News