Thursday, November 21, 2024
HomeLatest NewsWorld Newsடைட்டானிக் கப்பலை நோக்கி மீண்டும் சாகச பயணம் -தயாராகும் அமெரிக்க செல்வந்தர்!

டைட்டானிக் கப்பலை நோக்கி மீண்டும் சாகச பயணம் -தயாராகும் அமெரிக்க செல்வந்தர்!

அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை ஆராய்ச்சி செய்யும் பயணத்தில் ஈடுபட அமெரிக்க செல்வந்தர் ஒருவர் தயாராகி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த பயணத்திற்காக அமெரிக்காவின் ஓஹையோ பகுதியைச் சேர்ந்த செல்வந்தரான லேரி, கடலில் மூழ்கிய ரைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ரைற்றானிக் கப்பலை பார்ப்பதற்காக கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் ரைற்றானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு மேற்கொண்டது.இதற்காக 21 அடி நீளத்தில் ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கியை அந்த நிறுவனம் தயாரித்திருந்தது.இந்நிலையில், கடந்த ஆண்டு இதில் ஐந்து பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் திடீரென ‘டைட்டன்’ நீர்மூழ்கியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்த விசேட குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலுக்குப்பிறகு அவர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்த்க்கது.குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், 74 வயதான அமெரிக்க செல்வந்தர் ஒருவர் தனது உதவியாளருடன் இந்த பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகின்றார். செல்வந்தர் நாசா நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்ற தனியார் விண்வெளி வீரர் எனவும் அவர் இதற்கு முன்னர் சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News