Tuesday, December 24, 2024
HomeLatest News500 கிலோ கஞ்சாவைத் தின்று ஏப்பம் விட்ட எலிகள்

500 கிலோ கஞ்சாவைத் தின்று ஏப்பம் விட்ட எலிகள்

கஞ்சா வியாபாரிகளிடமிருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ கிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினரே பதிலளித்திருப்பது நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

குறித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

அதாவது 386, 195 கிலோ என இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 586 கிலோ கஞ்சாவில் 500 கிலோ கஞ்சாவை கிடங்கில் இருந்த எலிகள் தின்று தீர்த்து விட்டதாக போதை மருந்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்ட நீதிமன்றத்தில் மதுரா பொலிஸார் தெரிவித்திருப்பதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அந்த கஞ்சாவின் மதிப்பு கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

Recent News