விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வயல்களை அண்மித்த பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.