Thursday, January 23, 2025
HomeLatest Newsதென்னிந்திய திரைப்படங்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!

தென்னிந்திய திரைப்படங்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா பொலிவூட் சினிமா குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படத்தில் நடித்து திரையில் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஷ்மிகா தற்போது பொலிவூட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது, அதில் அவர் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது,

பொலிவூட்டில் தான் நல்ல நல்ல ரொமான்டிக் காதல் பாடல்கள் இருப்பதாகவும் தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல் , கவர்ச்சி டான்ஸ் உள்ளதாகவும் மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடல் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசிய பேச்சால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

Recent News