Saturday, January 25, 2025
HomeLatest Newsஆறுகளில் நீர்மட்டம் சடுதியாக உயர்வு – நீடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஆறுகளில் நீர்மட்டம் சடுதியாக உயர்வு – நீடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா, களனி, நில்வலா, களு மற்றும் கிங் ஆகிய ஆறுகளில் தற்போது உயர் நீர்மட்டம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மழைவீழ்ச்சியின் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு பெரிய ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களும் தற்போது 67 வீதம் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.

Recent News