Sunday, May 5, 2024
HomeLatest Newsஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - வெளியான இரகசியம்..!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் – வெளியான இரகசியம்..!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் அடுத்த வருடமே ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறலாம் என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலைமறை காயாக வெளிப்படுத்தியுள்தாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தவாரம் சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து உரையாடிய போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க வருகின்ற தேர்தலில் தான் போட்டியிடுவதற்கான வாய்புக்கள் உள்ளதாகவும், அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, முன்னர் இருந்ததை காட்டிலும் நாடு சிறந்த நிலையில் இருப்பதாகவும், பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு திரும்பியதும் தாம் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தலிற்கும் அழைப்பு விடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News