Friday, January 17, 2025
HomeLatest Newsசர்வதேச நாணய நிதியத்தின் தலைவருடன் ரணில் பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருடன் ரணில் பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைக்கும் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விருப்பம் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recent News