Wednesday, December 25, 2024
HomeLatest Newsமஹிந்த வீட்டில் ரணில் தஞ்சம்!

மஹிந்த வீட்டில் ரணில் தஞ்சம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தஞ்சமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா நடத்திய ஊடக சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் பேசியுள்ளார். இதனால் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் தற்போது நுழைந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.

Recent News