Sunday, January 19, 2025
HomeLatest Newsபுலம்பெயர் தமிழர்களிடம் கையேந்தும் ரணில்!

புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்தும் ரணில்!

நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளதுடன் இந்த நிலையில் வெளி நாடுகள் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம் .

மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம் . அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

Recent News