அரசு விரைவில் வீடு செல்லும், மக்களை ஏமாற்றும் அரசு சரி வராது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அரச பயங்கரவாதம் ரணில் அரசாங்கத்தில் தலை விரித்து ஆடுகிறது அவர் ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை நாட்டை மீட்டு கொடுத்த மாணவர்களை கைது செய்து பயங்கர வாத தடை சட்டத்தை கையில் எடுத்து நாட்டை மிரட்டுகிறார் இதன் மூலம் என்ன தெரிகிறது.
இன்னொரு மக்கள் அலையை எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் மக்களும் அதற்காகத்தான் காத்திருக்கின்றார்கள். நாடு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது .
அதனை சீர் செய்யவேண்டும் அழுகிய பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துங்கள், தரமான பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை நடத்துங்கள் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மாணவர் குழுவில் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது,
நாட்டையும், நாட்டு மக்களையும் கொடிய அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அனைவரும் ஓரணியில் ஒன்று சேர வேண்டும் என குறிப்பிட்டார். இதன் போது கீழ் வரும் கோரிக்கைகளை
அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைத்தனர்.
தனியார் மற்றும் பெருந் தோட்ட ஊழியர்கள் அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்குங்கள், அடக்கு முறையை நிறுத்த வேண்டும், பேச்சுரிமையை நசுக்காதே, பயங்கரவாதச் சட்டத்தை ரத்து செய், எண்ணெய்,வளங்களை பாதுகாப்போம், துறைமுகம், மின்சாரம் போன்ற சொத்துக்களை பாதுகாத்தல்,சுகாதார மற்றும் கல்வி உரிமைகளை உறுதி செய் செய்ய வேண்டும்,
பல்கலைக் கழகங்களுக்கும், உயர்கல்விக்கும் போதிய இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கையெழுத்து வேட்டை ஆரம்பித்தனர்.