Wednesday, December 25, 2024
HomeLatest News17 வருடங்கள் காத்திருந்த ரணிலுக்கு கிடைத்த வாய்ப்பு!

17 வருடங்கள் காத்திருந்த ரணிலுக்கு கிடைத்த வாய்ப்பு!

சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி பதவியின் தற்காலிக நிலையான பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

1993 லிருந்து 1994, வரை, 2001 இலிருந்து 2004 வரை, 2015 இலிருந்து 2018 வரை மற்றும் 2018 இலிருந்து 2019. வரை அவர் பிரதமராக பதவி வகித்து வந்தார்

அதேநேரம் 1994 இலிருந்து 2001 மற்றும் 2004 இலிருந்து 2015 வரையும் அவர் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்து வந்தார்.

இதனையடுத்து 2005ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டபோதும், அதில் அவர் தோல்வியடைந்தார்.

இந்தநிலையில் அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

எனினும் 2010 ஆம் ஆண்டு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆதரவை வழங்கினார்.

எனினும் 2010ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்தார். 2015ஆம் ஆண்டில் ரணிலின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் இதுவரை காலம் கிடைக்காத ஜனாதிபதி பதவியின், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்து, தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வந்து, பிரதமராகி, தற்போது ஜனாதிபதியின் பதில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளமை ரணிலின் அரசியல் சகிப்புத்தன்மையை கிடைத்த அங்கீகாரம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

Recent News