Friday, January 17, 2025
HomeLatest Newsநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக ராஜபக்சக்கள் மீது வழக்கு தாக்கல்

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக ராஜபக்சக்கள் மீது வழக்கு தாக்கல்

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றம் சுமத்தி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மூவர் அடங்கிய குழுவொன்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவி அமைப்புக்களும், கட்சியின் சட்டத்தரணிகளும் இணைந்து இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், நாட்டின் டொலர் கையிருப்பினை இல்லாமல் செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பணவீக்க அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அந்நிய செலாணி பற்றாக்குறை என பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மனுவில் குறிப்பிட்ட சிலர் வேண்டுமென்றே மத்திய வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News