Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅமைச்சரவையில் இடம்பெறாத ராஜபக்ஸவினர்!

அமைச்சரவையில் இடம்பெறாத ராஜபக்ஸவினர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை தற்போது பதவியேற்றுள்ளது.

குறித்த அமைச்சரவையில் ராஜபக்ஸவினர் எவரும் அமைச்சுப் பதவியில் இடம்பெறவில்லை.

சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

சரத் ​​வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை

இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசேகரவிற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினரான நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அமைச்சுப் பதவி எதையும் ஏற்க தயாரில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News