Saturday, January 25, 2025
HomeLatest Newsகடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

அத்துடன், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் கடும் மழை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும்.

பெரும்பாலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Recent News