Monday, January 27, 2025
HomeLatest NewsIndia Newsஇரு சக்கர வாகன திருத்துநராக மாறிய ராகுல் காந்தி..!வைரலாகும் புகைப்படங்கள்..!

இரு சக்கர வாகன திருத்துநராக மாறிய ராகுல் காந்தி..!வைரலாகும் புகைப்படங்கள்..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் திருத்துநராக மாறிய புகைப்படங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த மாதம் 22 ஆம் திகதி லொறி ஒன்றில் ஏறி அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார்.

அதையடுத்து, கனரக லொறி ஓட்டுனர்கள் இரவு முழுவதும் லொறி ஓட்டும் பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இரவு வேளையில் அந்த லொறியில் பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில், தற்பொழுது தலைநகர் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதிக்கு திடீரென ராகுல் காந்தி சென்றுள்ளார்.

அங்கு இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடைக்குள் நுழைந்த அவர் அங்கிருந்த மெக்கானிக்குடன் ஒன்றாக அமர்ந்து இரு சக்கர வாகனங்களை பழுது பார்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

Recent News