Tuesday, December 24, 2024
HomeLatest Newsபதவி துறந்தார் கோட்டா- உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்!

பதவி துறந்தார் கோட்டா- உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்!

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை கோட்டபாய ராஜபக்ச சபாநாயகருக்கு மின்னஞ்சலில் இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இராஜினாமா கடிதம் தொடர்பில் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபரிடமும் அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்றுமுன் விசேட ஊடக சந்திப்பை நடத்தினார்.

குறித்த சந்திப்பில் உரையாற்றிய சபாநாயகர்,

பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ச சட்டபூர்வமாக விலகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி 2022 ஜூலை 14 முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான அரசியலமைப்புச் செயற்பாடுகள் இப்போதிருந்து ஆரம்பிக்கப்படும், அதுவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகச் செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.

Recent News