Friday, December 27, 2024
HomeLatest Newsஅமெரிக்க குடியுரிமைக்காக போராடும் கோட்டா!

அமெரிக்க குடியுரிமைக்காக போராடும் கோட்டா!

தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதியினை பெறுவதற்கான ஏற்பாடுகளை அவரது சட்ட நிபுணர்கள் ஊடாக ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ச, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்திருந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பதால், முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை மீளப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், அமெரிக்க குடியுரிமையை துறந்தவருக்கு அதை திரும்ப வழங்க அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதற்கிடையில், அவர் அமெரிக்க கிரீன் கார்டு பெறும் பணியை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News