Monday, December 23, 2024
HomeLatest Newsராபர்ட் மாஸ்டர் மடியில் குயின்ஸி! சிறையில் நடந்தது என்ன?

ராபர்ட் மாஸ்டர் மடியில் குயின்ஸி! சிறையில் நடந்தது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குயின்ஸி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இரண்டு பேரும் சரியாக விளையாடவில்லை என்று சக போட்டியாளர்களால் தெரிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சண்டைகள், கொமடிகள் அரங்கேறி வருகின்றது. மக்களிடையே குறித்த நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படும் நபர் யார் என்ற கேள்வி அதிகமாக இருந்து வரும் நிலையில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் சரியாக விளையாடாத நபர்கள் என்று ராபர்ட் மற்றும் குயின்ஸி இருவரையும் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவின் பின்னே சுற்றிவந்தாலும், குயின்ஸியிடம் தந்தையாக பழகி வருகின்றார். நேற்றைய தினத்தில் குயின்ஸியை பெட்டில் படுக்க வைத்துவிட்டு அவர் தரையில் படுத்திருந்தார்.

மேலும் குயின்ஸிக்கு தனது தலையணையால் காற்று வீசி அவர், ஒரு கட்டத்தில் குயின்ஸியை மடியில் போட்டு தூங்கவும் வைத்தார். நேற்றைய தினத்தில் சிறையில் ராபர்ட் மாஸ்டர் சிறையில் குயிஸிடம் தந்தையாக நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் நெகிழ வைத்துள்ளது.

Recent News