Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டில் கேள்விக்குறியாகும் பாடசாலை வாழ்க்கை?

நாட்டில் கேள்விக்குறியாகும் பாடசாலை வாழ்க்கை?

நாட்டின் விலைவாசி அதிகரிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது.

இதில் பாடசாலை மாணவர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல எனும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையையும் இந்த பொருளாதார நெருக்கடியால் கேள்வி குறியாகியுள்ளது.

நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் கூடுகின்றதே தவிர குறைப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை என பாடசாலை பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பட்டால், பிள்ளைகளை தொடர்ந்து பாடசாலைக்கு அனுப்புவது கேள்வி குறியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விலைவாசி அதிகரிப்பிற்கு அரசாங்கமே காரணம். நாட்டு வளங்களை சுரண்டுபவர்கள் சுரண்டிக்கொண்டே போவார்கள். இல்லாதவர்கள் இல்லாமலே போவார்கள். இதை யாரும் கேட்க போவதும் இல்லை மக்கள் பணத்தை எடுத்தவர்களிடமிருந்து யாரும் திருப்பி வாங்குவதும் இல்லை என ஒரு தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent News