Monday, January 27, 2025
HomeLatest Newsராணி எலிசபெத்தின் ரகசிய கடிதம்; 2085 வரை திறக்க முடியாது!

ராணி எலிசபெத்தின் ரகசிய கடிதம்; 2085 வரை திறக்க முடியாது!

ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் ஒன்று அவுஸ்திரேலியா பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தை வருகிற 2085ஆம் ஆண்டு வரை திறக்க முடியாது.

இந்த கடிதத்தை இரண்டாம் எலிசபெத் மகாராணி 1986 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். பின்னர் அவரது உத்தரவுப்படி அந்த கடிதம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு வரலாற்று கட்டடத்தில் உள்ள பெட்டகத்திற்குள் பூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்னியின் லார்ட் மேயர் என்று பெயர் உறையிட்டு எழுதிய இணைப்பு கடிதத்தில், “ஒரு பொருத்தமான நாளில் கி.பி. 2085-ல், தயவுசெய்து இந்த உறையைத் திறந்து, சிட்னி குடிமக்களுக்கு எனது செய்தியைத் தெரிவிக்க வேண்டும்” என ராணி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News