Wednesday, December 25, 2024
HomeLatest Newsதனது வாழ்நாளில் சுமார் 30 நாய்களை வளர்த்துள்ள மகாராணி எலிசபெத்!

தனது வாழ்நாளில் சுமார் 30 நாய்களை வளர்த்துள்ள மகாராணி எலிசபெத்!

மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் ‘கோர்ஜிஸ்’ எனப்படும் இனத்தைச் சேர்ந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் மகாராணியாரின் இரண்டாவது மகனும் ‘டியோக்’ நகரின் இளவரசருமான ஆண்ருவிற்கும் அவரது முன்னாள் மனைவியிடமும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மேலும் இரண்டு நாய்கள் மகாராணியாரின் வளர்ப்பில் இருந்ததாகவும் அவை யாரிடம் செல்லும் என்பது குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இளவரசர் ஆண்ரூவிடம் கையளிப்பு செய்யப்படவிருக்கின்ற ‘கோர்ஜிஸ்’ இனத்தைச் சேர்ந்த நாய்கள் மகாராணியாரின் அருகில் எப்போதும் கூடவே இருக்கும் என்பதுடன் மகாராணியார் மாத்திரம் செல்லக் கூடிய பகுதிகளுக்கு அவருடன் கூடவே செல்லக்கூடிய வகையில் மிகவும் பாசத்திற்குரிய செல்லப் பிராணியாகவும் இருந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மாகாராணியார் தனது வாழ்நாளில் சுமார் 30 நாய்களை வளர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News