செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விலையில்லா தானிய ஏற்றுமதியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்தார்.
பொருளாதாரத் தடைகள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும் உணவுப் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு பயனுள்ள தானிய ஒப்பந்தத்திற்கு ஆப்பிரிக்க நாடுகள் அழைப்பு விடுத்தன.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியதால் உலகளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை எழுப்பியது.
இந்த நிலையில் புடின் இவ்வாறு ஆபிரிக்க நாடுகளுக்கு தானியங்களை அளிப்பது உலக நாடுகளுக்கு ஓர் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.