Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்தியாவிற்கு மறுத்து சீனாவிற்கு தலை அசைத்த புதின்..!

இந்தியாவிற்கு மறுத்து சீனாவிற்கு தலை அசைத்த புதின்..!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வர இயலாது என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.


சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உக்ரைன் போரைத் தொடர்ந்து புதினை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் ரஷ்யாவை விட்டு எங்கேயும் போக முடியாத நிலையில் புதின் உள்ளார்.


முதன்முறையாக அவர் இந்தக் கட்டுப்பாட்டை கடந்து சீனாவுக்கு செல்ல உள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை புதின் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஷி ஜின்பிங் மாஸ்கோ பயணம் மேற்கொண்டதும் இரு தலைவர்களும் தங்கள் தோழமைக்கு எந்த வித எல்லையும் இல்லை என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Recent News