Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு  புது திட்டம் தீட்டும் புட்டின்..!

இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு  புது திட்டம் தீட்டும் புட்டின்..!

ரஷ்யாவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஆரம்பமாகவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் ரஷ்யாவினால் சட்ட விரோதமாக உக்ரைனில் இணைக்கப்பட்ட பகுதிகள் உட்பட, ரஷ்ய கூட்டமைப்பின் அனைத்து பகுதிகளிலும் ஒக்டோபர் மாதம் முதல் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.

புதிதாக சேர்பவர்களுக்கான வயதெல்லை 27 இல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்க இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனுடனான யுத்தம் ஆரம்பமாகி 20 மாதங்களை எட்டியுள்ள நிலையில்,
ரஷ்ய ஆயுத படையினர் உக்ரைனுடன் நீண்ட யுத்தத்தை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக முன்னர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Recent News