Friday, January 24, 2025
HomeLatest Newsநான் வெற்றிலை சாப்பிடுவதையும் ரிவியில் போடுங்க..!மீடியா முன் வெற்றிலை சாப்பிட்ட மொட்டு எம்.பி..!

நான் வெற்றிலை சாப்பிடுவதையும் ரிவியில் போடுங்க..!மீடியா முன் வெற்றிலை சாப்பிட்ட மொட்டு எம்.பி..!

ஆறு வெற்றிலை, புகையிலை, மற்றும் பாக்கு மொத்தமாக 60 ரூபாவிற்கே வாங்கியதாகவும் ஆனால் அதனை ஊடஙக்கள் 80 ரூபா என கூறுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விமலவீர திஸாநாயக்க வெற்றிலை சாப்பிட்டிருந்த நிலையில் தற்போது அந்த காணொளி அதிகம் பகிரப்பட்டுள்ளது.

நான் வெத்தில சாப்பிடுவதையும் ரிவியில் போடுங்க என்று ஊடகவியலாளர்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் கேள்வி – தற்போது உள்ளவர்களிடம் சாதாரணமாக பேச முடியாது எழுந்து செல்கின்றனர்.

பதில் (விமலவீர) – ஐயோ நான் அவ்வாறு அல்ல நான் கல கலப்பான மனிதர் நீங்கள் பேசுங்கள்.

ஊடகவியலாளர் கேள்வி – என்ன வெற்றிலையை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?என்னவிலை?விமலவீர – 6 வெற்றிலை, புகையிலை, பாக்கு மொத்தமாக 60 ரூபாய்தான், ஆனால் ஊடகம் 80 ரூபாய் என்று கூறுவீர்கள்.- என்று தெரிவித்துள்ளார்.

Recent News