Thursday, January 23, 2025
HomeLatest Newsஅரசியலில் ஆதாயம் தேடும் நோக்கம்...!அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழு உருவாக்கம்...!

அரசியலில் ஆதாயம் தேடும் நோக்கம்…!அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழு உருவாக்கம்…!

அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக
இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியலில் ஆதாயம் தேடும் நோக்கத்தில் 20 வெவ்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் இந்துக்களுக்காக அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்திருந்த முதலாவது இந்து கூட்டம் கேபிடல் ஹில்லில் இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர், அமெரிக்க காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் சட்டமன்றமாகும்.

நாட்டில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அவர்கள் பலியாகாது இருப்பதை உறுதி செய்வதற்கு ஒரே மாதிரியான எண்ணம் உடைய உறுப்பினர்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்து மதம் மீதான வெறுப்பை அமெரிக்கா நீக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம், இந்து மதம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் மீது மதவெறி மற்றும் பாகுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் எனவும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் துன்புறுத்தலின்றியும் பாகுபாடு மற்றும் வெறுப்பு இன்றியும் தனது கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு உரிமை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி, அமெரிக்காவில் இந்துக்கள் பல பாகுபாடுகளை எதிர்கொள்வதன்காரணமாகவே பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பல்வேறு இந்து குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News