தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 95 டொலர் என தாய்லாந்தில் இருந்து வருடத்திற்கு 300,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வாங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.
முன்னர் ஓமானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 105 டொலர் செலவானது என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதன் மூலம் ஒரு மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 10 டொலர் என செலவை குறைக்க முடிந்துள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதன்படி முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயுவின் முதல் தொகுதி தாய்லாந்தில் அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கப்படும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.