புதிதாக 600 பேரூந்துக்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பேரூந்துக்கள் இயங்கி வரும் நிலையில், அதில் 10 ஆயிரம் பேரூந்துக்கள் 15 ஆண்டுகளை கடந்துள்ளன.
அதனால் 15 ஆண்டுகள் பயன்படுத்திய பேரூந்துக்களை பயன்படுத்த கூடாதென மத்திய அரசு பயன்படுத்த அறிவித்துள்ள சுழலில் பழைய பேரூந்துகளிற்கு பதிலாக புதிய பேரூந்துக்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை இறங்கியுள்ளது.
சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பேரூந்துக்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து தற்பொழுது முதல் கட்டமாக 600 பேரூந்துக்களை கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
அவற்றில் 150 பேரூந்துக்கள் முழுமையான தாழ்தள பேரூந்துக்களாக வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிற்கு தரமான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக புதிய பேரூந்துக்களை வாங்கும் பணி வெகு விரைவாக செயற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.