Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉள்ளூராட்சி தேர்தலின் பின் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலின் பின் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தேர்தலை ஒத்திவைப்பதற்காக அல்ல தேர்தலை நடத்துவதற்காகவே வேட்புமனு கோரப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News