Wednesday, March 12, 2025
HomeLatest NewsIndia Newsஅமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றியது பெருமை...!பிரதமர் மோடி பெருமிதம்...!

அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றியது பெருமை…!பிரதமர் மோடி பெருமிதம்…!

அமெரிக்காவின் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றியது பெருமையாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றியது பெருமை அளிப்பதாகவும்,அனைத்து எம்.பி.க்களிற்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைவரதும் பங்கேற்பு இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளின் வலிமையையும், சிறந்த எதிர்காலத்திற்கான தமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் குறிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு தொடரும் என்றும் அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News