Thursday, December 26, 2024
HomeLatest Newsஅரசியலில் குதித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!

அரசியலில் குதித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பலர் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பிரதான கட்சிகளில் இணைய இணக்கம் வெளியிட்டுள்ளதாக, அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி மற்றும் சோசலிசக் கட்சி மாத்திரமின்றி ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய கட்சிகள் ஊடாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியலுக்குள் வரவுள்ளனர்.

இதற்கிடையில், கட்சி சார்பற்ற குழு வேறு கட்சியை உருவாக்கி அரசியலில் இறங்க ஏற்கனவே முடிவு செய்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News