Thursday, January 23, 2025

காலிமுகத்திடலில் இருந்து படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; அதிரும் தென்னிலங்கை

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி இன்று காலை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோகோட்டாகமவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

கோகோட்டாகம ஆர்ப்பாட்டக்காரரர்கள் 9 பேரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஒன்பது பேர் உட்பட கோகோட்டாகம போராட்டக்காரர்கள் அனைவரும் இணைந்து, குறித்த கைது நடவடிக்கைக்கான காரணம் என்னவென கோருவதற்காக இலங்கை பொலிஸ் தலைமையகத்தை அடையவுள்ளதாக தெரியவருகின்றது

Latest Videos