Tuesday, December 24, 2024
HomeLatest Newsதலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணத்தில் இருந்து பெண்களிற்கு பாதுகாப்பு..!வெளியான அறிக்கை..!

தலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணத்தில் இருந்து பெண்களிற்கு பாதுகாப்பு..!வெளியான அறிக்கை..!

ஆப்கானிஸ்தானில், தலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தலீபான் உச்ச தலைவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் தலீபான்கள் அந்த நாட்டில் ஆட்சியை அமைத்தது தொடக்கம் பெண்களின் சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த வகையில், பெண்களிற்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கை போன்றவற்றில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறான சூழலில், அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி,பெண்கள் வசதியான மற்றும் வளமான வாழ்க்கையினை பெற்றுக்கொள்வதற்குரிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News