Monday, January 20, 2025
HomeLatest Newsதனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிசாரிடம் பாதுகாப்பு கோரிக்கை

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிசாரிடம் பாதுகாப்பு கோரிக்கை

இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இன்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

Recent News