Wednesday, December 25, 2024
HomeLatest Newsகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்...!178 ஆப்கானியரை ஒப்படைத்த ஈரான்...!

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்…!178 ஆப்கானியரை ஒப்படைத்த ஈரான்…!

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரான் நாட்டிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் தங்களது மீதி தண்டனை காலத்தை அனுபவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஈரானை போன்று, ஆப்கானிஸ்தானும் 3 ஈரானிய கைதிகளை அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைத்ததுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது தொடக்கம் இதுவரையிலும் 1 131 ஆப்கானிய கைதிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரான் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மந்திரி அஸ்கர் ஜலாலியன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News