Thursday, December 26, 2024
HomeLatest Newsஇரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆண்களுக்கு சிறை! ஆபிரிக்க நாட்டில் விசித்திர சட்டம்

இரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆண்களுக்கு சிறை! ஆபிரிக்க நாட்டில் விசித்திர சட்டம்

ஆபிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ள எரித்திரியா என்னும் சிறிய நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Recent News