பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பதாக அவரது மாமியார் சுதா மூர்த்தி கூறிய தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரிஷி சுனக் பிரதமராகிய போது பிரிட்டன் கடுமையாக பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தது. அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு அந்நாட்டின் பொருளாதாரத்தினை மெல்ல இக்கட்டான சூழலில்
மீட்டெடுத்துள்ளார்.
இதற்கிடையே ரிஷி சுனக் குறித்து அவரது மாமியார் சுதா மூர்த்தி சில முக்கிய கருத்துகளைச் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் மகள் அக்ஷதா மூர்த்தியும் ரிஷி சுனக்கும் கல்லூரியில் படிக்கும் போது அவர்களிற்கிடையில் காதல் மலர்ந்ததால் இருவருக்கும் திருமணம் பெங்களூரில் செய்யப்பட்டது. இதன் மூலம் அக்ஷதா மூர்த்திக்கும் இன்னும் இன்போசிஸில் குறிப்பிட்ட அளவுக்குப் பங்குகள் இருக்கின்றது.
தற்பொழுது ரிஷி சுனக் இங்கிலாந்தில் இருந்தாலும், அவர் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றார். மேலும், தாம் அனைத்து நல்ல காரியங்களையும் வியாழக்கிழமையில் ஆரம்பிப்போம் எனவும் கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தைக் கூட வியாழக்கிழமையே ஆரம்பித்ததாகவும், அனைத்து நல்ல காரியங்களையும் வியாழனிலே ஆரம்பிப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், ராகவேந்திரா சுவாமிக்காக வியாழக்கிழமை விரதம் இருப்பதாகவும் அதனை மருமகன் ரிஷி சுனக்கும் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக ஒரு நாட்டின் பிரதமர் சமய அனுட்டானங்களை உரிய முறைப்படி பின்பற்றுவது என்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.