Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsபிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம் - வரவேற்பினை வெளியிட்ட வெள்ளை மாளிகை..!

பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம் – வரவேற்பினை வெளியிட்ட வெள்ளை மாளிகை..!

வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த பயணம் தொடர்பாக வெள்ளை மாளிகை வரவேற்பினை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளிற்கு இடையிலும், அவற்றின் மக்களுக்கு இடையிலும் நெருக்கமான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜூன் 22 ஆம் திகதி அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க உள்ளனர் என்று அதிபரின் ஊடகச் செயலாளர், கரீன் ஜீன் பியரி அறிவித்துள்ளார்.

மேலும் இந்தோ பசிபிக் சுதந்திரமான வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Recent News