இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் உறுதியாகதுணை நிற்கும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் போரின் தற்போதைய நிலவரம் குறித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மோடி, கடினமான இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் என்றும் உறுதியாக நிற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் இந்தியா அதை எதிர்க்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.
இந்த நிலையில்,
” இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் பிரதமர்
மோடி அதிசயம் செய்வார். பிரதமர் மோடி சொன்னால் அவரது கைவிரல்களை பிடித்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ” என இஸ்ரேல் ராணுவ பிரிவின் உளவுத்துறை முன்னாள் தலைவர் அமோஸ் யாட்லின் கூறி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் மொசாட் உளவுத்துறை சந்தித்த பின்னடைவு பற்றி இஸ்ரேல் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் அமோஸ் யாட்லின் என்டிடிவிக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
இஸ்ரேல் உளவுத்துறை தோல்வி குறித்து அவர் விளக்கினார். இந்த வேளையில் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி பற்றியும் அவர் கூறிய தகவல் என்பது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதுபற்றி அமோஸ் யாட்லின் கூறியதாவது:
இஸ்ரேல்-இந்தியா இடையேயான உறவு என்பது முக்கியமான ஒன்றாகும். இஸ்ரேல் இந்தியாவுக்கு நிறைய உதவிகளை வழங்கி வருகிறது. எனினும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தம் செய்யும் முயற்சியை நாங்கள் வரவேற்போம்.
ஏனென்றால் ராஜதந்திர நடவடிக்கைக்கு இந்தியா பெயர் பெற்றுள்ளது. பிரதமர் மோடியால் அதிசயம் செய்ய முடியும். இதனால் இருதரப்புக்கும் மத்தியஸ்தம் செய்தால் நாங்கள் மோடியின் விரலை பிடித்து செல்ல
தயாராக இருக்கிறோம்” என்றார்.