பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அந்த வகையில், அதிபர் மேக்ரனும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், 25 ஆண்டுகால பிரான்ஸ் நட்பை புதுப்பிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்ததாக இருதலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருதரப்பிலும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆயினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து விவரம் வெளியாகவில்லை. 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அவை மட்டுமன்றி, பிரதமர் மோடி, இரவில் பாரீஸின் லோவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதுடன், பிரான்சின் தேசிய தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்றதற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பிரான்ஸில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.