Saturday, December 28, 2024
HomeLatest NewsIndia Newsஆஸ்திரேலியப் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

ஆஸ்திரேலியப் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாட்ரா, இரு நாடுகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும் ஆஸ்திரேலிய அரசுடன் மோடி விவாதிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு புகலிடம் தரக்கூடாது என வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் மோடி சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recent News