Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsபிரதமர் மோடி சொல்வது சரி..!கருணாநிதியின் குடும்பம் என்பதே தமிழ்நாடு தான்.!பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

பிரதமர் மோடி சொல்வது சரி..!கருணாநிதியின் குடும்பம் என்பதே தமிழ்நாடு தான்.!பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில், அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திய பொழுதே, குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.

இது அவர் குறிப்பிடுகையில், தற்காலத்தில் நல்லது செய்வதற்கு கூட பயமாகவுள்ளதாகவும் அதனை பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரலாறு அதிகளவானோரிற்கு புரியவில்லை எனவும் குறிப்பாக நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தி.மு.க. என்பது குடும்ப இயக்கம் என்றும், அதற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்வது உண்மை என்றும் கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாநாடு நடத்தும் போதும், போராட்டங்கள் நடத்தும் போதும் குடும்பம் குடும்பமாகவே வாருங்கள் என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தினால் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளமையாலே பிரதமர் மோடி இறங்கிவந்து பேசுவதாகவும் மணிப்பூர், வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும் , பிரதமர் அந்த பக்கமே செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, மத்தியில் சிறப்பான மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்குவதற்கு தயாராக வேண்டும் எனவும்,வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News