Sunday, January 12, 2025
HomeLatest Newsஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு- விசேட அறிவிப்பு வெளியாகியது!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு- விசேட அறிவிப்பு வெளியாகியது!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா ச.தொ.ச குறைத்துள்ளது.

இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும், சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 389 ரூபாவிற்கும் 425 கிராம் உள்நாட்டு டின் மீன் 540 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 205 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News