Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் ஆடைகளின் விலைகள் குறைகிறது

இலங்கையில் ஆடைகளின் விலைகள் குறைகிறது

நாட்டில் ஆடை அலங்கார பொருட்களின் விலைகள் எதிர் காலத்தில்  கணிசமாக குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

  ஆடை மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாட்டு கடந்த 23ம் திகதியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் அவ்வகை பொருட்களுக்கான விலைகள் கணிசமாக குறைவடையும் என்று துறைசார்ந்த வர்த்தகர்கள்  தெரிவித்தனர்.

இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வரும் வாரங்களில் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இறக்குமதி செய்வதற்கான நாணயக்கடிதங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பிரச்சினைத் தீர்க்கப்பட்டால் ஆடை, வாசனைத் திரவியங்கள் அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் கணிசமாக குறைவடையும் என்றும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recent News