காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொய்யான தகவல்களை பரப்பிய பிரித்தானிய பெண்களை நாடு கடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நேற்று மறுத்துள்ளது.
முன்னதாக ஜனாதிபதி, பிரித்தானிய பெண்ணை வெளியேற்றுமாறு உத்தரவிட்டதாக, குடிவரவு அதிகாரி ஒருவரை கோடிட்டு செய்தி வெளியிடப்பப்பட்டிருந்தது.
எனினும் இந்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமே கையாள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் விசாவை ரத்து செய்ய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் தனது விசா நிபந்தனைகளை மீறியதால் ஆகஸ்ட் 15 அல்லது அதற்கு முன் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தாம் வெளியேற கோரப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னர், அவரை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்படுள்ளது.