Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமகாத்மா காந்தி கொள்கையில் இந்தியா-அமெரிக்கா கூட்டுறவு -பூரிப்பில் அதிபர் பைடன்..!

மகாத்மா காந்தி கொள்கையில் இந்தியா-அமெரிக்கா கூட்டுறவு -பூரிப்பில் அதிபர் பைடன்..!

மகாத்மா காந்தியின் கொள்கையில் இந்தியா-அமெரிக்கா கூட்டுறவு வேரூன்றியுள்ளது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தில்லி வந்த அவா் அமெரிக்க அதிபா் பைடன் அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் மகாத்மா காந்தியின் கொள்கையாக பொறுப்புடைமை இருந்தது.
அந்தக் கொள்கையில் இந்தியா-அமெரிக்கா கூட்டுறவு வேரூன்றியுள்ளது.
நாம் பங்கிட்டுக்கொண்டிருக்கும் பூமிக்கான இந்தப் பொறுப்புடைமையை இரு நாடுகளும் பகிா்ந்துகொண்டிருக்கின்றன.

பருவநிலை மாற்ற நெருக்கடி, போா் உள்ளிட்டவற்றின் அதிா்ச்சிகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்,
முக்கிய பிரச்னைகளுக்கு ஜி20 கூட்டமைப்பால் தீா்வு அளிக்க முடியும் என்பதை நிகழாண்டின் உச்சி மாநாடு நிரூபித்துள்ளது என்று தெரிவித்தாா்.

Recent News