Tuesday, March 11, 2025
HomeLatest Newsஎலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதற்காக ஜனாதிபதி செயலகம், பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு இலங்கை அரசாங்கம் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Recent News